Sunday, December 01, 2013

இரண்டாம் உலகம் - Review with @harishsubramaniamஇரண்டாம் உலகம் ஒரு சுகமான அனுபவம் இதை படிச்ச உடனே எனக்கு ரசனை இல்லனு ரொம்ப அதி மேதாவிங்க(arm chair  experts ) சொல்லலாம் .எனக்கும் தெரியல ...ரொம்ப காலமா சீரியஸ் ஆன காமெடி படத்தையும் காமெடி யான சீரியஸ் படத்தையும் பார்த்ததோட விளைவுன்னு நினைக்கிரேன்.


நம்ம கிட்ட இருக்கற ரொம்ப நல்ல பழக்கம் என்னனா,நம்ம வீட்ல பண்ண புளியோதரை எவ்ளோ நல்ல இருந்தாலம் அதை குறை சொல்லிட்டு kfc ல கேவலமான rice bowl ல பிரமாதம் பாராட்டுவோம் .நம்ம ஊர்ல ஒரு படம் மொக்கையா இருந்தா கூட 50 நாள் theatre ஓடும் (atleast போச்டேர்லயவது  ) ஆனா புரியலனா ஒரே வாரத்துல ஓடிடும்  . theatreல இருந்து .இந்த படத்த inception ,pulp fiction .புரிஞ்சவங்க கூட புரியலனு சொல்றது தான் ஆச்சர்யம்


கதை :love is  eternal shakspeare  அண்ணன் சொன்னாறு .அதாவது காதல் உலகத்த தாண்டியும் பெரியது.அப்படி  இருக்க விண்ணை தாண்டி காதல் வந்தா எப்டி இருக்கும் சொல்றது  தன கதை..

திரைக்கதை -ஒரு சில directors படத்துல தான் details அதிகமா எதிர் பார்க்கலாம் .அதுல செல்வாவும் ஒருத்தர் .எனக்கு பிடிச்ச விஷயங்கள் சில


  • இரண்டாவது உலகத்துல காளான் தான்  உணவுனு   சொல்றாங்க.அதுக்கு சொல்ற கரணம் பிரமாதம் .அந்த உலகத்துல காதல் இல்லாதது நால  பூக்கள் மலராது .பூக்கள் இல்லாம வளர கூடிய தன்மை உடையது காளான்  
  • மதுக்கு யார பார்த்தாலும் ரம்யாவா தெரிவதும் ,வர்ணாவுக்கு எல்லாரும் மறவன தெரியர்த்தும் காதலோட லீலைகள் 
  • ரம்யா   இறந்த இடத்துல ரத்தம் கருப்பா இருக்கும் .அந்த உலகத்துல ரத்தத்தோட நிறமும் கருப்பு தான் .சிங்கத்தோட ரத்தம் கருப்பா இருக்கும்                                                                                                                                                         
  • ரம்யா இறந்த இடத்துல பூ பூக்கும் அவ உயிர் அந்த உலகத்துக்கு போனதுக்கு அடையாளும்                                                                                                                                                                                                                                              
  •  ரெண்டு உலகத்துலயும் வர characters ஓட  தன்மை ரொம்ப பிடிச்சுது..ரம்யா மதுவ லவ் பண்ண தொரதறது. அங்க மறவன் தொரதறது வர்ணவை . மதுவ adam teasing பண்ற பொண்ணுக ,வர்ணாவ evetease பண்ற பசங்க.இது மாதிரி 3 பட தனுஷ் மாதிரி மொத்தமா வேறு பட்டு இருந்துச்சு .                                                                
  • என்ன தான் அந்த உலகத்துல பெண்ணை கடவுளா வணங்கினாலும் பெண்ணுக்கு மரியாதையும் பாதுகாப்பும் கிடையாது .இது நம்ம இந்தியாவுக்கு பொருந்தும் டெல்லி , பெங்களூர்  தான்  எடுத்து காட்டு இது மாதிரி ரொம்ப சொல்லலாம் 
கத்திரி(editing )- படம் ரொம்ப slow னு பலர் சொன்னங்க .இது என்ன ஹரி படமா 5 பாட்டு 4 பாஞ்சுனு காது கிளியர மாதிரி வேகமா கத்த .இது linear story (ஒரு சீன் வெச்சு அடுத்த சீன் develop பண்றது) .ஏற்கனவே supernu சொன்ன இரண்டு பாட்டு கட் பண்ணிதாங்க ,இதற்கு அப்பறமும் கத்திரி போட்ட படத்தோட ஆன்மாவ  இழந்திடும்.

இசை -ரொம்ப இடத்துல 3 ஓட சாயல் தெரிந்தாலும் ரசிக்க வெச்சுது .அனிருத் ஓட bit songs வெச்ச இடம் கச்சிதம் .ஆனா  fight scenla கோவில் மணி போன்ற bgm பெரிய சொதப்பல் .நம்மள கைதட்ட விடாம பண்ணிருச்சு .பாட்டு visual treat .மன்னவனே ரொம்ப நல்லா  இருந்துச்சு 

புகைப்படம் -இது மாதிரி படத்துல camera ரொம்ப கஷ்டம் .வெறும் பச்சை திரைக்கு  (green mat ) முன்னால அவங்க கற்பனை குதிரைய மிகுதியா ஓட விடனும் .ரொம்ப கலர் shades பயன்படுத்தினது scene ஓட moodஅ பிரதிபலிச்சது .

அசைவூட்டம்  (அனிமேஷன்)-படத்தோட budgetகு பார்க்கும் பொது ரொம்ப நல்ல இருந்துச்சு .ரொம்ப கஷ்ட பட்டுருகாங்க .சிங்கம் fight இருந்த 20 பேரையும் விசில் அடிக்க வெச்சுது .ஒரு சில இடத்துல கொஞ்சம் சருகிச்சு .அத avoid பண்ணிருக்கலாம்

ஆர்யாஇத தனுஷ் பண்ணிருந்தா நல்லா இருக்கும்னு  சொல்றாங்க .அவர் உடம்ப மறவன் கதாபதிரதுல கற்பனை பண்ணி குட பார்க்க முடியாது .ஆர்யா நான் கடவுளுக்கு அப்பறம் நடிக்கலாம் செஞ்சிருகாறு .romance scene சூப்பரா ஸ்கோர் பண்றார் .pink பௌடர கொஞ்சம் குறைச்சு இருக்கலாம்

அனுஷ்கா -   இது மாதிரி performance ரோல் பன்னதுக்காகவே பாராட்டலாம் .ரெண்டு உலகத்துலயும் காதலை  மறைக்க முயற்சி செய்ற கட்சிகள் நச்சுனு இருந்துச்சுகண்ணமாபேட்டைனு சொன்ன புதுபேட்டைய நல்ல படம்னு சொல்றதுக்கு இத்தனை வருஷம் தேவை பட்டுச்சு .இத எப்போ சொல்ல போறோம்னு தெர்லஇரண்டாம் உலகம் விண்ணை தாண்டி வந்த அற்புத காதல்........ if you guys feel free,please post as comment!

0 comments:

Post a Comment

feel free to post your comments! Don't Spam here!